
கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் 155 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொடர்பாடல் சாவடிகளில் பல வெகுமதி அட்டைகள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நுகேகொடை மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் குறித்த கபார் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனவே, சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் கணேமுல்ல, பொரளை, கொட்டாவ, மாலம்பே, நவகமுவ, ஹோமாகம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறான 09 திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் சந்தேகநபரிடம் இருந்து பல வெகுமதி அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேக நபர் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.