
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முறையாக பங்களிக்காத உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
இதன்படி, டெங்கு பரவல் அதிகமாக உள்ள பகுதிகளை இனங்கண்டு, டெங்கு பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றுவது உட்பட உள்ளுராட்சி அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, நேற்றைய நிலவரப்படி இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 39,228 என்றும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்துள்ளார்.