உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான அஜய் பங்கா பதவியேற்றுள்ளார்.
இதன்படி, உலக வங்கியின் தலைவராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் இவர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு இவர் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்களால் 5 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும், 63 வயதான அஜய் பங்கா உலக வங்கியின் 14வது தலைவர் ஆவார்.