யூரியா உர மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை தேடுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளுக்கு அமைச்சர் நளின் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதோடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக நுகர்வோர் அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.