
மீகொட, படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திசர உயன, படகொட பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய நபர் காலையில் வீட்டில் இருந்து காரில் புறப்படும் போது இவ்வாறு துப்பாக்கிச் சூடு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் இதுவரையில்அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரியவருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.