
பாகிஸ்தானின் மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஏப்ரல் இறுதிக்குள், நாட்டின் அரசாங்கத்தின் மொத்த கடன் ஆண்டுக்கு ஆண்டு 34.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பாகிஸ்தானின் மொத்த கடன் தொகை 58.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் பாகிஸ்தானின் கடன் மாதாந்த அடிப்படையில் 2.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, பாகிஸ்தானின் உள்நாட்டுக் கடன் 36.5 டிரில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த கடன் சதவீதத்தில் 62.3 சதவீதம். கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் சுமார் 22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது மொத்த கடன் சதவீதத்தில் 37.6 சதவீதமாகும். தற்போதைய கடுமையான நிதி நெருக்கடியால் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உடனடி கடன் நிவாரணத்தை எதிர்பார்க்கின்றது.
ஆனால் அடிப்படை ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் பாகிஸ்தானால் இன்னும் கடன் நிவாரணம் பெற முடியவில்லை எனவும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.