
அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் பதில் அதிபர்களாக நியமிக்கப்பட்டாலும் அது தொடர்பான சிறப்புரிமைகள் அவர்களுக்கு இல்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி கடமையாற்றும் அதிபர்களாக கடமையாற்றுபவர்களுக்கு பதில் அதிபர்களாக இடமாற்றம் கிடைக்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்களுக்கு கற்பித்தல் சேவைகள் தொடர்பான சம்பள உயர்வுகள் மாத்திரமே வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதிபராக கடமையாற்றும் ஒருவர் இடமாற்றம் பெற வேண்டுமாயின் அதனை பொது ஆசிரியர் சேவை தொடர்பில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.