
நாட்டின் வருடாந்த தனிநபர் வருமானத்தின் பிரகாரம் நாட்டில் சுமார் 10 இலட்சம் வரி செலுத்துவோர் இருக்க வேண்டும் ஆனால் 02 இலட்சம் வரிக் கோப்புகளே இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, வரி செலுத்தக்கூடிய ஆனால் வரி செலுத்தாத இவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனவும் கடந்த ஆண்டுகளை விட நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல், 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வரிக் கோப்பைத் திறக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.