மேஜர் ஜெனரல் பி.எம்.சி.பி விக்ரமசிங்க புதிய பணிப்பாளர் நாயகம் பிரதானியாக இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இராணுவ மரபுக்கு அமைவாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இதன்படி, தலைமைப் பணிப்பாளர் நாயகம் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வில் இராணுவத்தின் தலைமைப் பணி அதிகாரி கிளையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவொன்று கலந்துகொண்டனர்.
மேலும், மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்க முன்னாள் இராணுவத்தின் நிறைவேற்று ஜெனரலாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.