
காலி அக்மீமன நுகடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மீகொட, கொடகந்தவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இதன்படி அதிவேக வீதியின் நுழைவாயிலில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட முற்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர், பொலிஸ் அதிகாரியுடன் சண்டையிட்டுள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த 18 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு பையில் இருந்து டி-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 105 பாவிக்கப்படாத தோட்டாக்கள் மற்றும் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.