
ரத்கம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டு இளைஞன் ஒருவரின் தலையில் தடியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, காலி நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை காண இரு தரப்பினரும் சென்ற போது, இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, கச்சேரி முடிந்ததும், ஒரு குழுவினர் வந்து வழியில் நின்று, மற்றொரு குழுவைச் சேர்ந்த இளைஞரின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளதாகாவும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களும் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.