
வெளிநாடுகளில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களான தனுஷ்க மற்றும் சந்தன ஆகியோரின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் சஜிவனி ரூபாகா அல்லது “சஜீ அக்கா” என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொஹிலவத்தை, வெல்லம்பிட்டிய சிறிய புட்கமுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, சந்தேகநபரிடம் இருந்து 252 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் நான்கு இலட்சத்து 61,300 ரூபாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்தனர்.