
இந்தியாவின் குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்
வல்சாத்தின் தரம்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 234 மிமீ மழை பெய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, குஜராத்தில் பல இடங்களில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதோடு கனமழைக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க குஜராத் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.