
சதொச நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு செயல்பாட்டு மற்றும் கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டு, உத்தேச மறுசீரமைப்பு செயல்முறை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிண்றது.
இதன்படி, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.