
நீதிமன்ற உத்தரவை மீறி பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, பேலியகொட மெனிங் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகி இன்று நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுக்குமாறு கொழும்பு அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, பேலியகொட பொலிஸார் நேற்றைய தினம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படடதோடு வெளியாட்களுக்கு கடைகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மெனிங் சந்தையில் பொது தொழிற்சங்கம் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவொன்று இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.