
புதிதாக 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பிரதான பாடங்களுக்கு மாகாணத்திற்கு ஏற்ப இந்த ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.