
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொதுப் பரீட்சைக்கு தோற்றிய பிள்ளைகளுக்கான வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்தோடு, இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு செலவிடப்படும் பணத்தை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.