
கஹவத்தை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கிய நான்கு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, 11ஆம் ஆண்டு படிக்கும் 13 மாணவர்கள் 10ம் ஆண்டு மாணவர்கள் ஒரு குழுவுடன் பாடசாலை நேரத்தில் தகராறு செய்ததாகவும் இதில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிகின்றனர்.
அத்தோடு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் தற்போது சத்திரசிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் பொது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்குச் சென்ற பொலிஸார் மாணவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததோடு சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பாடசாலையின் இரு மாணவர்கள் முதலில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றைய இரு மாணவர்களும் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
சந்தேகநபர்கள் பாலமடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.