
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த வழக்கின் விசாரணையை அப்படியே ஒத்திவைத்து மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் அங்கம் வகித்த நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்துடன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகள் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நௌபர் மவ்லவி, சஜீத் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம்லெப்பை, அலியார் கபுர், முகமது சனாஸ் தீன், மொஹமட் ரிஸ்வான் உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 பயங்கரவாதச் சதி மற்றும் ஈஸ்டர் பண்டிகைக்கு சதி செய்தல் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.