
கோலாலம்பூரில் உள்ள செந்தூலில் இலங்கையர்கள் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் மலேசிய பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதன்படி, கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, சந்தேகத்திற்குரிய இரண்டு சந்தேக நபர்களும் இலங்கையர்கள் எனவும் பிக்கடந்த வெள்ளிக்கிழமை (22), செந்தூல் கிராமத்தில் உள்ள பெர்ஹெண்டியன் தெருவில் உள்ள கடைவீதியில், கைகால்கள் கட்டப்பட்டு, தலையை பிளாஸ்டிக் பைகளால் மூடிய நிலையில், மூன்று பேரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், மலேசிய போலீஸார் கண்டெடுத்தனர்.
அத்தோடு, குறித்த கடை வீடு திருமணமான தம்பதியருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டதோடு பலியானவர்களில் தம்பதியரின் மகனும் அடங்கியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மற்ற இருவர் அந்த வளாகத்திற்குள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து குடியிருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடையின் இரண்டாவது மாடியில் தம்பதிகள் தங்கியிருந்த இரண்டு இலங்கை சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தந்திருந்த நிலையில் குறித்த நபர்கள் சரணடைந்துள்ளதாகவும் கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.