
மெக்சிகோவில் தேவாலயம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் சிக்கிக் கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, சியுடாட் மடெரோவில் உள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதோடு குறித்த கூரை இடிந்து விழுந்தபோது சுமார் 100 பேர் அங்கு இருந்ததாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிக்கியவர்களில் பல சிறுவர்களும் இருப்பதாக தெரியவருவதோடு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.