
“ஒன்று தொடக்கம் 5 வகையான வகுப்புகளை கொண்ட அமைந்த கல்வி நிலையாக காணப்படும் அதேவேளை, இக் கல்வி நிலையானது 1920 ஆம் ஆண்டில் முதல் இலக்க கட்டளை சட்டத்தின் கீழ் ஆரம்பக் கல்வி தொடர்பான ஒழுங்குவிதியின் கீழ் உட்பட்டவாறு உருவாக்கப்பட்டுள்ளது. 1929 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீள வாய்ப்பட்ட விதி கோவையின் முதல் நிலை வகுப்பாக ஐந்தாம் தரத்தினை முடிவெல்லையாக கருதி இக் கல்வி நிலையானது தீர்மானிக்கப்பட்டது. இலங்கை பாடசாலைக்கு அமைய கல்வித் திட்ட திணைக்களத்தினால் கல்வி பாடத் தொகுதி முறை திட்டம் மூலமாக வெளியிடப்பட்டன”
ஆரம்பக்கல்வி தன்னார்வமானது. மற்றும் முற்றிலும் தனிப்பட்ட ரீதியிலே செயல்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான பாடசாலைகள் நகர்ப்புறங்களில் உள்ளன. ஆரம்பக் கல்வியில் ஒன்று முதல் ஐந்து வகையான வகுப்புகள் அடங்கப்பட்ட நிலையில் கல்வியானது இலவசமாகவும் கற்பிக்கப்படுகின்றது. ஆனால் பாரம்பரியத்தின் படி 1999 ஆம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கம் ஒரு சீர் திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்கும் புதிய விதிமுறைகளை ஸ்தாபிக்கும் வரை கட்டாயமாக இருக்கவில்லை. ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளின் 14 சதவீதம் பேர் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை பாடசாலை வருகையை உயர்த்திக் கண்காணிக்கும் அதிகாரத்துடன் கிராமக் குழுக்களுக்கு இப்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி கற்பதற்கு வருகை ஊக்குவிக்கும் முகமாக மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களும் நடைபெற்று வருகின்றது. இலங்கையில் 90 விதமான பாடசாலைகள் கல்வி கற்ற பிள்ளைகள் ஆரம்பக் கல்வியில் பயில்வதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தொடக்க கல்வியின் முதல் மூன்று ஆண்டுகளுக்கான பாடத்திட்டம் மதம், தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் எண்ணிக்கைகளாக அடங்குகின்றன. தரம் நான்கிலே அதே பாடங்கள் தொடரப்பட்ட நிலையில் உடற்கல்வி ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் ஒரு பயனுள்ள பங்கினை ஊக்குவிப்பதாகும். எனவே 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்வியினுடைய இலக்குகளில் காணப்படும் தேர்ச்சிகளாது முதலாம் நிலைக் கல்வியின் உடைய முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான முதலாம் நிலை கல்வியானது எதிர்கொள்கின்ற சவால்களாக, வளப் பற்றாக்குறை, பயிற்றப்பட்ட ஆசிரியர்களுடைய பற்றாக்குறை, பிள்ளைகளுடைய வரவின்மை, முன்பள்ளி ஆசிரியர்களுடைய பற்றாக்குறை, சமனற்ற பரம்பல், போசாக்கின்மை மற்றும் குடும்ப சூழல் பரீட்சைகளை மாத்திரம் மையமாகக் கொண்ட கற்றல், இடைவிலகல், நிதி ஒதுக்கீடு இன்மை போன்ற பல்வேறுபட்ட சவால்களை அன்று தொடக்கம் இன்று வரை உள்ள முதலாம் நிலை கல்வியானது எதிர்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் பெரும்பான்மையான கல்வியாக, எழுத்து கல்வி முறையே இன்றும் காணப்படுகின்றது. தன்னார்ந்த ரீதியில் அவர்களுடைய ஆற்றல்களை வெளிப்படுத்துமாறு காணப்படும் கல்வி ஆனது தற்போதைய காலகட்டங்களில் பார்ப்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. ஒன்று தொடக்கம் 5 வரையான ஆரம்ப பாடசாலையானது ஐந்தாம் தரத்தில் நடைபெறுகின்ற புலமைப் பரிசில் பரிட்சையை மையமாகக் கொண்டது. பரீட்சைக்காகவே தரம் 3 4 5 இல் உள்ள மாணவர்களை புலமைப் பரிசில் பரிட்சையை எதிர்கொண்டே அவர்களுக்கு கல்வியானது புகட்டப்படுகின்றது. எனவே அவ்தரங்களில் காணப்படுகின்ற மாணவர்களுக்கு இயற்கையான முறையில் அமையப்பெறும் கல்வியானது கிடைப்பதாக தெரியவில்லை.
இன்னும் மேலும் திறன்களை வளர்க்கவும், இணைப்பாடவிதான செயல்பாடுகளில் தம்மை ஊக்குவிக்கவும் முயற்சி செய்யும் பொழுது பரீட்சைகளும் போட்டி சூழலும் இடையூறாகின்றது. எமது கல்வி முறையானது துறை ரீதியாக ஒழுங்கமைக்கப்படாததே இதற்கு காரணமாகும். எண்ணறிவு, எழுத்தறிவு வளர்க்கப்படுவது ஆரம்பக் கல்வியின் உடைய முக்கிய பங்கு. ஆனால் பிள்ளையின் எதிர்காலத்துக்கு சிறந்தது எது என்பது தொடர்பான அடிப்படை ஊக்கப்படுத்தல் கூட அங்கு இல்லை. எமது நாட்டினை பொருத்தமட்டில் பரிட்சையை மையமாகக் கொண்டு காணப்படும் கல்வி முறையானது இன்றுவரையிலும் அழியாத ஒன்றாகும் மேலும் உளரீதியாக மாணவர்களுடைய தாக்கமானது தரம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் ஊடாக விதைக்கப்படுவதனால் சிறு வயதில் அவர்களிடையே உள்ள இயற்கையாக வெளிப்படுத்தப்படுகின்ற ஆற்றல்களும் திறன்களும் முடங்கி கிடக்கின்றன.
மேலும் இயற்கையான திறன்களை வெளிப்படுத்துகின்ற விதமாக இலங்கையில் அனுராதபுரத்தில் அழகப் பெருமானை பகுதியில் பிறந்த ஒன்றை வயது பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. இவ் பெண் பிள்ளையானது ஏழு நிமிடம் மற்றும் 6 வினாடிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை அடையாளம் கண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்தியாவில் குழந்தை ஆரோகி, ஒன்றை வயதில் அதிகபட்சமான படங்களை அடையாளம் கண்டு அதனுடைய பெயர்களையும் கூறி படங்களுடைய சிறப்பம்சங்களையும் எடுத்துரைத்துள்ளது எனவே குழந்தையும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமல்லாது தேஜஸ் எனப்படும் மூன்று வயது ஆண் பிள்ளை 80 நாடுகள் உடைய கொடி மற்றும் அவ்நாடுகளினுடைய பெயர்கள் என்பவற்றை கூறி இந்தியாவில் சேலம் பகுதியில் “கலாம் வேர்ல்ட்” சாதனை படைத்துள்ளது. இவற்றை நான் கூற முற்பட்டதன் விளைவு இப் பிள்ளைகள் சிறு வயதிலிருந்து அவர்களுடைய தன்னார்வ திறன்களை வெளிப்படுத்தியுள்ளது. எனவே அவர்கள் வளர்ந்து முதலாம் நிலை கல்வியினை தொடருகின்ற பட்சத்தில் அவர்களுடைய திறன்கள் மேலும் மெருகேற்றப்பட வேண்டுமே தவிர அவ் திறன்களை அடக்கி வெறுமனே புத்தகப் படிப்பை மாத்திரம் ஊட்டுவது சிறப்பானதோர் காரியமா? என நீங்களே கூற வேண்டும். எனவே இவ்வாறான சிக்கல்களே இலங்கையின் முதலாம் நிலைக் கல்வியின் தற்கால சூழ்நிலை.
மேலும் சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடைய முதலாம் நிலை கல்வித் திட்டத்தினை எடுத்து நோக்கும் பொழுது, அக் கல்வித் திட்டங்கள் அனைத்தும் வெறுமனே புத்தக படிப்பு அல்ல. அதற்கு பதிலாக அவர்களுடைய உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்து முகமாக பல்வேறுபட்ட பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உதாரணமாக நீச்சல், விளையாட்டுக்கள், உற்பத்தி பொருட்களின் விற்பனைகள், சந்தை படுத்தல் போன்ற பல்வேறு பட்ட திறன்களை விரித்து செய்யும் முகமாகவே அவர்களுடைய கல்வி நடவடிக்கையானது காணப்படுகின்றது. அது மாத்திரமல்லாது அது 7 வயதிற்கு பிற்பட்ட காலப்பகுதியிலே முதலாம் நிலை கல்வியானது போதிக்கப்படுகின்றது. ஆனால் இலங்கையை பொறுத்தமட்டில் வெறுமனே புத்தகப் கல்வியானது “கிணற்றுத் தவளை போல்” எனப்படுகின்ற வாசகத்துக்கு ஒப்பாக காணப்படுகின்றது.
அது மாத்திரமில்லாது, ஆசிரியர்கள் உடைய பற்றாக்குறை மேலும் விரித்துக் கூறுவோமாயின் பயிற்றப்பட்ட ஒழுங்கான நெறிமுறைக்கு உட்பட்ட கற்றறிந்த ஆசிரியர்களுடைய பற்றாக்குறை. குறிப்பாக நோக்குமிடத்தில் கிராமப் பகுதிகளில் காணப்படுகின்ற முதலாம் நிலை கல்வி தனிப்பட்ட ரீதியில் போதிக்கப்படுகின்ற அதாவது இடைநிலை கல்வியோடு இணைப்பில் அல்லாத தன்னார்ந்த ரீதியில் காணப்படுகின்ற பாடசாலைகளில் குறிப்பாக ஒன்று தொடக்கம் 5 வகையான தரங்கள் மாத்திரம் காணப்படும் பாடசாலைகளில் பற்றாக்குறை நிலவி வருவது மிகவும் வருத்தத்துக்குரியது. அப்பாடசாலைகளில் ஒரு ஆசிரியர் மூன்று தரங்களுக்கு வகுப் ஆசிரியர்களாக செயல்பட்டு வருகின்ற அளவிற்கு பற்றாக்குறை. மேலும் ஒழுங்காக நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தற்கால இலங்கையில் காணப்படும் கிராம பகுதிகளில் காணப்படும் முதலாம் நிலை கல்வி. இவ் சவால்களையும் எதிர் கொள்கின்றது.
அடுத்த கட்டமாக பேசப்படுவது, வளங்களுடைய சமனற்ற பரம்பல் அதாவது பாடசாலை அன்று தன்னார்ந்த ரீதியில் இயங்கப்பட வேண்டும் எனில் அதற்கு வளங்கள் என்பது முக்கியமான ஒன்று முற்கால கட்டத்தில் இருந்து தற்காலம் வரை வளங்களினுடைய பற்றாக்குறையானது பேசப்படும் ஒரு பொருளாக மாறி வருகின்றது. பெரிதும் கூறப்போனால் கிராமப்புற பாடசாலைகளை இவ்வாக்கியத்தின் பேசு பொருள் பிள்ளைகள் கற்கக்கூடிய மேசை, கதிரைகளாகட்டும் மேலும் அவர்கள் இணைபாடவிதான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடிய விளையாட்டுப் பொருட்களாகட்டும் கட்டட வசதிகளாகட்டும் என பல்வேறுபட்ட வளங்களினுடைய தட்டுப்பாடானது தற்கால முதலாம் நிலைக் கல்வியை எதிர்கொள்கின்ற மாணவர்களுக்கு ஒரு பாரிய நெருக்கடிக்கு உண்டான சவால்கள் எனலாம். இச் சவால்கள் எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட போகின்றது என கேட்டால் அதற்கு கேள்விக்குறியே விடையாக காணப்படும். ஏனெனில் கூடியளவு அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கையானது கல்வியின் உடைய அபிவிருத்தியில் இப்படிப்பட்ட பல்வேறுபட்ட சிக்கலுக்கு உண்டான கிராமப்புற பாடசாலைகளை எதிர்கொண்டு சிக்கல்களை நிவர்த்தி செய்வார்களாயின் எதிர்காலத்தில் முதலாம் நிலை கல்வி சவால் எனக் கூறக்கூடிய வளப்பற்றாக்குறை இல்லாதொழியும்.
இவ்வாறு சவால்களை அடுக்கி கொண்டு செல்கின்ற வேளையில் போசாக்கின்மை மற்றும் குடும்ப சூழல் சவாலானது மிகவும் முக்கியமானது. ஒன்று காலையில் எழுந்து மாணவன் ஒருவன் பாடசாலைக்கு வருகின்ற பொழுது அவன் காலை உணவானது உட்கொள்ளாமல் பாடசாலைக்கு சமூக மளிப்பானானால் அவனால் காலை பிரார்த்தனையில் கூட முழுமையாக பங்கு பெற்ற முடியாது. அதனை அடுத்து பாட வேலைகளில் முழுமையான கவனத்தினை செலுத்த முடியாது. ஒரு பதகளிப்பு பின் தங்கள் நடத்தையில் மாற்றம் என்பன அவன் மேல் ஏற்படுத்தக் கூடும்.
மேலும் ஒரு பாட வேளையில் பிற்பாடு முதலாம் நிலை கல்வி போதிக்கப்படும் பாடசாலைகளில் போசாக்கு உணவு வழங்கப்படுகின்றது. எனவே இவ்வாறான செயற்பாடு சவாலை கூடிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது.
கல்வியினுடைய சமனற்ற பரம்பலானது முதலாம் நிலைக் கல்வியின் உடைய அடுத்த சவாலாக காணப்படுகின்றது. அதாவது மாணவர்களின் வாழ்க்கை முதல் படி எனத் தொடங்குகின்ற முதலாம் நிலை கல்வியினுடைய செயல்பாடுகள் நகரப்புறம் கிராமப்புற என இருவகையாக எம்மால் நோக்க முடியும். நகர்ப்புற பாடசாலைகளில் ஒரு சிறப்பான கல்வியினை அதாவது குடும்ப சூழல், குடும்பப் பின்னணி, பெற்றோரின் பங்களிப்பு, மாணவர்களின் ஆற்றல்கள் மற்றும் திறமைகள், இணைப்பாட விதான செயல்பாடுகள், மாணவர்களுடைய பங்காற்றல் என பல்வேறு பட்ட விடயங்கள் நகர்ப்புறங்களில் உயர் நிலையை கொண்டிருக்க அதே கல்வியானது கிராமப்புறங்களில் வழங்கப்படுகின்ற பொழுது பெற்றோர்களுடைய பங்களிப்பு குறைவாகவும், பிள்ளைகளுடைய குடும்ப சூழலானது பின் தங்கிய நிலைகளிலும் ( காலை உணவு இன்மை தாய் தந்தையர்களுக்கு இடையே முரண்பாடு ) பிள்ளைகளுடைய ஆர்வமின்மை, பெற்றோர்களுடைய கவலையீனம் போன்ற பல்வேறுப்பட்ட காரணங்கள் கிராமப்புற பாடசாலையை சூழ்ந்திருக்கின்றன. எனவே இவ்வாறான ஒரு சமனற்ற பாங்கானது முதலாம் நிலை கல்வியினுடைய பாரிய பிரச்சினைகளில் ஒன்று.
அது மாத்திரமன்றி நகர்ப்புறங்களில் கூடுதலாக முதலாம் நிலை கல்வியினை தொடர்வதற்கு முன்னர் மாணவர்களை பிரத்தியோக ரீதியிலான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவர். முக்கியமாக ஆங்கில கல்வி மற்றும் கணித புலமை மேலும் எழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளுக்கு நகரப்புறங்களில் மேலும் பணம் படைத்தவர்கள் இச்செயற்பாட்டில் மாணவர்களை உள்ளீர்க்கின்றனர்.
ஆனால் மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதியில் இருக்கின்ற மாணவர்களும் மேலும் வசதி வாய்ப்பற்ற குடும்பங்களுடைய மாணவர்களும் நேரடியான கல்வியை முன் பள்ளியை தொடர்ந்து முதலாம் நிலை கல்விக்கு உள்ளீர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு சரியான வாசிப்பு பயிற்சியினை அல்லது எழுத்து பயிற்சியினை ஆசிரியர்களானவர்கள் சிறப்பான ஒரு நோக்கு கையில் வழிநடத்த வேண்டும். பல்வேறுபட்ட எனது பார்வைக்கு உட்பட்ட பாரிய பாடசாலைகளில் சில மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். அதாவது முதலாம் தரத்தினை தொடர்ந்து சரியான ஒரு முன்னேற்றம் இல்லாத இரண்டாம் வகுப்புக்கு ஏற்றப்படுகின்றனர்.
அதிலும் மாணவர்கள் சரியான ஒரு ஊக்கப்படுத்தல் இன்றி வழி நடத்தல்கள் இன்றி மூன்றாம் வகுப்பிற்கும் இறுதியாக புலமை பரிசில் பரீட்சைகளை எதிர்கொள்கின்றன. அவ்வாறான பின் தங்கிய நிலையில் காணப்படுகின்ற மாணவர்கள் தொடர்ச்சியாக பின்தங்கிய இடத்திலே இருக்கின்றனர். இதற்கு யார் காரணம்? என்பதை எம்மால் கூற இயலாது. ஆசிரியர்களோ? அல்லது மாணவர்களுடைய செயல்பாட்டு தன்மையில் ஏற்படும் குறைவோ? என்பது வினாவிற்கு உரியதாகும்.
ஆகவே முதலாம் நிலைக் கல்வியின் உடைய சவால்களையும் சூழ்ந்து இருக்கின்ற பிரச்சினைகளையும் இவ்வாறு அடுக்கிக் கொண்டே செல்கின்ற நிலையில், ஒரு அடித்தளத்தில் பாரியதொரு குறைபாடுகள் காணப்படும் ஆயின் அவ் அடித்தளத்தின் மேலே திட்டமிட்டுள்ள வீடாக இருந்தாலும் சரி, ஒரு கட்டிடமாக இருந்தாலும் சரி, ஒரு உயர் நிறுவனத்தின் உடைய ஸ்தாபகமாக இருந்தாலும் சரி அதன் மேல் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. ஆகவே அடித்தளத்தை மீண்டும் மீண்டும் சீரமைக்க வேண்டும். எனவே “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா” எனப்படுகின்ற பழமொழிக்கிணங்க ஒரு கட்டடத்தினுடைய அடித்தளமானது ஒழுங்காக கட்டப்படாத இடத்தில் அதற்கு மேல் எந்த ஒரு கட்டுமானப் பணியையும் எம்மால் ஈடுபடுத்த முடியாது. ஆகையினால் ஒருவனது எதிர்காலத்துக்கு உந்து சக்தியாக காணப்படும் முதலாம் நிலைக் கல்வியின் உடைய சிறப்பு இதிலிருந்து எமக்கு மெய்ப்படுகின்றது.
எனவே தான் வளர்முக நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வின்படி உயர்கல்வி இடைநிலை கல்வி விளைவு வீதம் 15 வீதம் தொடக்கம் 17 வீதமாகவும் ஆரம்பக் கல்வியின் விளைவு வீதம் 27% ஆகவும் காணப்படுகின்றதனால் பிற கல்வி நிலைகளை விட ஆரம்ப கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தனியாளும் சமூகமும் கல்வியினால் அடைந்த நன்மைகளை தொகை ரீதியாக எடுத்துக் கூறுவது கல்வியின் விளைவு வீதமாகும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கு இணங்க ஆரம்பக் கல்வியின் அத்திவாரம் முறையாக இடம்பெற்றால் மாத்திரமே பிள்ளையினுடைய எதிர்காலத்துக்கு வழிவகுத்து விட முடியும். என்பதனை மனதில் கொண்டு பிள்ளையின் உடல் உளநிலையை ஏற்றார் போல ஆரம்ப கல்வி வழங்கப்படுதல் வேண்டும்.
விதுர்சா மாணிக்கதேவன்,
2ம் வருடம் முதலாம் அரையாண்டு,
கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கலைகலாசார பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.