
பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த நிலநடுக்கமானது ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.