
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா இன்று (20) சபைக்கு வெளியே தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதன்படி, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, கலாநிதி ரமேஷ் பத்திரன, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
மேலும், இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகள் மற்றும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, இது தொடர்பான அறிக்கையை தமக்கு விரைவாக சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.