2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளில் தரம் 06 க்கு மாணவர்களை இணைப்பதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளை பெப்ரவரி 05 முதல் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்: https://g6application.moe.gov.lk/#/
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சையை எதிர்கொண்டனர்.