
ஹோமாகம, பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகங்களை மூடிவிட்டு அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வற்புறுத்த வேண்டும் என தெரிவித்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பிக்குகள் அமைப்பினால் இன்று கல்வி அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்,எதிர்வரும் 30ஆம் திகதி கல்வி அமைச்சர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு தான் இணங்கியதாக கல்வெவ சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.