
டிக்டோக்கிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, நாட்டின் பொதுச் சேவையில் உத்தியோகபூர்வ பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் தொலைபேசிகளில் TikTok செயலியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சீனாவின் தலையீட்டை கட்டுப்படுத்துவதற்காகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளதோடு அதற்கான தடை இந்த வாரத்தில் கொண்டு வரப்படும் எனவும் குறித்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் இருந்து கிடைத்த ஆலோசனையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து, கனடா, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவை அதிகாரப்பூர்வ போன்கள் மூலம் டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் TikTok ஐ வைத்திருக்கும் சீனா நிறுவனம் மூலம் பயனர்களின் ரகசியத் தரவை சீனா அரசாங்கம் அணுகும் அபாயம் இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றார்கள்.