
தலத்துஓயா பிரதேச செயலகத்தில் இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சியின் போது பெண் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
இதன்படி, அரிசி வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு தலத்துஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
மேலும், விசாரணையில் உயிரிழந்த 68 வயதுடைய பெண் இதயநோயாளி என்பதும் தெரியவந்துள்ளது.