
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த வருடத்தை விட இவ்வருடம் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை இலங்கை போக்குவரத்து சபை அதிகரிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை தற்போது நிறைவடைந்துள்ளதால், சேவையில் சேர்க்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.