
மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பு வழங்கக் கோரி தேசிய மக்கள் படை மற்றும் பஃவ்ரல் அமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க அனுமதி உள்ளதா? இல்லை? தீர்ப்பை அறிவிப்பதை உச்ச நீதிமன்றம் காலவரையின்றி ஒத்திவைத்தது.
இதன்படி, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
அத்தோடு, குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவன, ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்து, இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு பிரதிவாதியாக குறிப்பிடப்படவில்லை எனவும் இது பாரிய குறைபாடு எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளதாகவும், அந்த அதிகாரத்தை ஆணைக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவை பிரதிவாதியாக குறிப்பிடாமல் அதன் உறுப்பினர்களை மாத்திரம் பிரதிவாதிகளாக குறிப்பிடுவது சட்ட குறைபாடு என சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், உரிய மனுவை நிராகரிக்குமாறு கோரினார்.
அத்தோடு, மனுதாரர் தேசிய மக்கள் படை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நைகல் ஹட்ச், இந்த ஆரம்ப ஆட்சேபனைகளை நிராகரித்து உண்மைகளை முன்வைத்தோடு அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சட்டத்தின் பார்வையில் உள்ளவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை பிரதிவாதிகளாக குறிப்பிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, பொறுப்பு வாய்ந்த தரப்பு முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை நிராகரித்து மனுவை தொடர்ந்தும் நடத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.
இதேவேளை, குறித்த மனுக்களை விசாரணைக்கு அனுமதிக்குமாறு பஃவ்ரல் அமைப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹஸ்திகா தேவேந்திராவும் நீதிமன்றத்தை கோரியதோடு குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பிரதமர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, நீதிமன்றில் அவர் பக்க விடையங்களையும் முன்வைத்தார்.
மேலும், அனைத்து தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மனுவை தொடர அனுமதிக்குமா? இல்லை? தீர்ப்பு அறிவிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.