
ஆபிரிக்க நாடான கென்யாவிற்கு சொந்தமான போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற சீனா பிரஜை, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் உத்தரவின் பேரில் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, விமானத்திற்குள் பிரவேசிக்கும் வரை இந்த சீன நபர் தனது இலக்கை அறிந்திருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளதுடன் கடந்த 18ஆம் திகதி துபாயில் இருந்து மற்றுமொரு சீனர் மற்றும் எகிப்திய பிரஜையுடன் இந்த நாட்டிற்கு வந்துள்ளதஸ்க்ஸ்வும் தெரிவிக்கப்படுகின்றது.