
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1,091 கிலோ பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை புத்தளம் முகாம் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி, புத்தளம் – பாலாவிய பிரதேசத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதனோடு தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வென்னப்புவ – லுனுவில மற்றும் கல்பிட்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன் குறித்த பீடி இலைகள் இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து கல்பிட்டிக்கு கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.