
பதுரலிய – கெலிங்கந்த மத்துகம வீதியில் மகேலி எல்ல பிரதேசத்தில் கெலிங்கந்தவிலிருந்து மத்துகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மின்கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 09 பயணிகள் காயமடைந்து புலத்சிங்கல, ஹொரணை மற்றும் நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், புலத்சிங்கல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்த மாணவன் 17 வயதுடைய புலத்சிங்கள பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.