
பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “LORAINE” என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (11) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதன்படி, கடற்படை மரபுப்படி கப்பலை ஏற்றுக்கொள்ள இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, எதிர்வரும் 15ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட உள்ளதாகவும், அங்கு மேற்கு கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் இணைந்து பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.