
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் பணிக்குச் சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த 42 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி, அல் ஜசீரா விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நேற்று (10) அவர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, செல்லுபடியாகும் விசா காலத்தை தாண்டி குவைத்தில் தங்கியிருப்பது, பணியிடத்தை விட்டு ஓடிப்போய் வேறு இடங்களில் வேலை செய்வது போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட குழுவினர் இலங்கைக்கு திரும்பியனுப்பப்பட்டுள்ளனர்.