
எதிர்காலத்தில் கல்லூரிகளுக்கு மூன்று வருட டிப்ளோமாவிற்கு அல்ல, நான்கு வருட பட்டப்படிப்புக்கான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கே ஆட்சேர்ப்பு செய்யப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 19 கல்லூரிகளும் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகமாகவும் அதனுடன் தொடர்புடைய பீடங்களாகவும் மாற்றப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏனைய பல்கலைக்கழகங்களைப் போன்று தொழில்சார் சங்கங்களை நிறுவுவதற்கு அனுமதியில்லை என்றும், இந்தப் பல்கலைக்கழகம் ஆசிரியர்களை உருவாக்குவதே இதற்குக் காரணம் என்றும், குறித்த பல்கலைக்கழகத்தில் ஒழுக்கமான குழுவை உருவாக்குவது அடிப்படைத் தேவை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.