
அடுத்த பருவத்தில் உரம் வேங்கும் விவசாயிகளுக்கு வவுச்சர் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வவுச்சர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இனிமேல் வவுச்சர் வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அடுத்த பருவத்தில் விவசாயிகளுக்கு இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை வேங்குவதற்கு விவசாயிகளின் கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரச்சினைக்குரிய பொருளாதார நிலைமைகள் காணப்படுகின்ற போதிலும், விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்க அரசாங்கம் தொடர்ந்து சலுகைகளை வழங்குவதாகவும், இதன் காரணமாக இறுதியில் நாட்டில் அரிசி உபரியாக இருக்கலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் தாம் முன்வைத்த அனைத்து யோசனைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்ததோடு இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை கொள்வனவு செய்வதற்கு இம்முறை பருவத்தில் விவசாயிகளுக்கு வவுச்சர் மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதன்படி, இளவேனிற் காலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000 ரூபா மற்றும் 40,000 ரூபா என வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளதுடன் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் தரவுகளின்படி, நாட்டில் உள்ள மொத்த நெல் விவசாயிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் எனவும் ஜூலை 4 ஆம் திகதிக்குள் 34,433 லட்சம் விவசாயிகளுக்கு வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், யாழ் பருவத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஏழு லட்சத்து பதினேழாயிரம் எனவும் இதுவரை ஐநூறு முப்பத்து நாலாயிரத்து நானூற்று முப்பத்து மூன்று வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த முழு வவுச்சர் தொகையின் பெறுமதி 11 பில்லியன் ரூபா என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.