
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியா விஜயத்தின் போது இலங்கையில் எரிசக்தி உட்பட பல துறைகளில் இந்தியாவின் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்தியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அண்மையில் இந்தியா வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவத்ராவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளதுடன், இலங்கையுடனான தனது உறவுகளில் சாதகமான மாற்றத்தை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் வெளிவிவகாரச் செயலாளர் கூறியதைக் காணமுடிந்தது.
அத்தோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுவதோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் மகத்தான வெற்றியடையும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் வினய் குவத்ரா மேலும் தெரிவித்துள்ளார்.