2024 ஆம் ஆண்டிற்கான, கல்வி அமைச்சு பாடசாலைகளில் முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும் மாதிரி விண்ணப்பத்தினையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி, அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் 01 இல் சேர்க்கப்படவுள்ள பிள்ளைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் உரிய மாதிரி படிவத்தின் படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்குகளுக்கு ஆகஸ்ட் 18, 2023க்கு முன் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஜூன் 30, 2023 அன்று செல்லுபடியாகும் வகையில் தொடர்புடைய அனைத்து தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எனவே, http://www.moe.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து உரிய அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.