
மனைவியின் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் உரிமத்தை முறைகேடாக பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று இலட்சத்து 30,000 ரூபாவை பெற்றதாககே கூறி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இளைஞர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்,வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, சந்தேகநபரின் மனைவி மருதானை – தேவானம் பியதிஸ்ஸ மாவத்தையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும், சந்தேக நபர் அந்த முகவரகத்தின் முகாமையாளராக கடமையாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.