
முட்டைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்கி நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து ஏப்ரல் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளை முட்டை ஒன்றுக்கு 44 ரூபாவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 46 ரூபாவாகவும் வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஒரு கிலோ வெள்ளை முட்டை 880 ரூபாவிற்கும், ஒரு கிலோ சிவப்பு முட்டை 920 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.