
2000க்கும் மேற்பட்ட இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இவர்கள் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிவிவிக்கப்படுவதோடு வீட்டு வேலைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளை விட்டு தலைமைவகி, குவைத் மாநிலத்தில் தற்காலிக தங்கும் விடுதிகளில் தங்கி, பல்வேறு பணியிடங்களில் மாதச் சம்பளம் 250 குவைத் தினார் எனப் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
அத்தோடு, இதுபோன்று வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 62 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும், குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிக விமான அனுமதியின் கீழ் அவர்களை குவைத்தில் இருந்து நாடு கடத்தியதை அடுத்து நாடு திரும்பியுள்ளனர் இவர்களில் 59 பேர் வீட்டு வேலையாட்கள் எனவும் இலங்கைத் தூதரகமும், காவல்துறை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்துடன் இணைந்து அவர்களுக்கான தற்காலிக கடவுச்சீட்டுகளைத் தயாரித்து நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.