
எல்லை நிர்ணய குழுவின் ஊடாக தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அறிக்கையினை அமுல்படுத்தினால் பல பிரச்சினைகள் எழலாம் எனவும் இதன் மூலம் சன்ஹிதிய வேலைத்திட்டமும் பாதிக்கப்படலாம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த அறிக்கையின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன் எல்லை நிர்ணய குழு அறிக்கையில் உள்ள விடையங்களை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க எடுக்கப்பட்ட முறை நடைமுறையில் இல்லை எனவும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது என்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர, அடுத்த வருடம் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.