
பொரளை சஹஸ்புர பிரதேசத்தில். சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சனைகள், முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் மற்றும் அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட பல கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இதேவேளை, குருந்துவத்தை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட வசந்த முதலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வசந்த முதலி இன்று குருந்துவத்தை பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.