
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.
இதன்படி, கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நேற்று இரவு நாட்டை வந்தடைந்தது.
இதேவேளை, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரை வரவேற்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறைக்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் 06 நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதுடன் அவரும் அவரது குழுவினரும் இன்று இரவு மீண்டும் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர்.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்றிரவு நாட்டிற்குச் சென்றதுடன், பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் நாட்டிற்கு விஜயம் செய்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதியை வரவேற்றதுடன், இரு தலைவர்களும் சுமார் ஒரு மணித்தியாலம் பதினைந்து நிமிடங்கள் சிநேகபூர்வ வெற்றிகரமான இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.