
தாய்லாந்தின் தெற்கு பகுதியில் மலேசிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சுங்கை கோலோக் என்ற இடத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, சந்தையொன்றில் அமைந்துள்ள பட்டாசு விற்பனை நிலையமொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தோடு, 9 பேர் உயிரிழந்துள்ளதோடு 115 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் 03 சிறுவர்களும் அடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த வெடிவிபத்தில் அருகில் உள்ள பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதோடு களஞ்சியசாலையைச் சுற்றியிருந்த பெரும் பகுதி தீயினால் நாசமாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.