
பல பிரதேசங்களில் நிலவும் வரட்சியான காலநிலை தொடருமானால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் இருந்து கூட அரிசியை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் இதனை கருத்திற் கொண்டு கால்நடை தீவனத்திற்கு அரிசி வழங்குவதில்லை என தீர்மானம் எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், நெருக்கடிக்கு முகங்கொடுத்து வந்த நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை பெற்று வரும் நிலையில் மீண்டும் எதிர்ப்பு அலை உருவாகி வருவதாகவும் அவ்வாறு நடந்தால் நாடு மீண்டும் பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.