
உலகில் எந்த ஒரு நாடும் தரக்குறைவான மருந்து வகைகளை உற்பத்தி செய்வதில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ஊடகப் பிரிவினருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, சம்பந்தப்பட்ட நாடுகளில் மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளையே சுகாதார அமைச்சு இலங்கைக்கு கொண்டு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டில் மருந்துகளை கொள்வனவு செய்ய பணம் இல்லாத காரணத்தினால் இலங்கைக்கு மருந்துகளை உதவியாக கொண்டு வந்ததாக வைத்தியர் இங்கு குறிப்பிட்டுள்ளதுடன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த மருந்துகளுக்கு அமெரிக்கா சான்றிதழ் மாத்திரம் கிடைக்குமா என்பது குறித்து ஆராயப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே மேலும் தெரிவிக்கையில், சுகாதாரத் துறையை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல அனைவரினதும் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.