
இந்தியாவினுடைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை கடன் அபாயத்தில் உள்ள நாடுகளுக்கான நிவாரணத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு புதுதில்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கும் – ஜப்பானுக்கும் இடையிலான கலந்துரையாடலில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கடன் நெருக்கடியிலிருந்து விடுபட, இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்கும் வகையில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் முயற்சியில் சீனாவும் இணைந்து கொள்ள முடியும் என இந்திய நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையின் மிகப்பெரிய கன்வலனுணரான சீனாவின் பங்களிப்பும் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குறித்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.