
ரஷ்யாவினுடைய தலைநகரான மாஸ்கோ மீது உக்ரைன் மீண்டுமொறு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலினை நடத்தியுள்ளது.
இதன்படி, குறித்த தாக்குதலில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும்தாக்குதல்கள் காரணமாக தலைநகரில் உள்ள விமான நிலையத்தை மூட ரஷ்யா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தோடு, குறித்த தாக்குதல் நடத்த வந்த ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மேலும் இரண்டு ஆளில்லா விமானங்கள் விபத்துக்குள்ளானதாகவும் ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் குற்றச்சாட்டை உக்ரைன் கடுமையாக மறுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.